December 8, 2024, 1:49 AM
26.8 C
Chennai

22 கோடி திருடு போன கடவுச்சொற்கள்! உங்கள் பாஸ்வேர்டு இருக்கா.. அறிந்து கொள்ள..!

password
password

சுமார் 22.5 கோடி பாஸ்வேர்ட்கள் மீட்டெடுத்துள்ளதாகவும் அவற்றை ‘ஹாவ் ஐ பீன் ப்வ்ன்ட்’ (எச்ஐபிபி) தரவுத் தளத்திற்கு தானம் செய்வதாகவும் என்சிஏ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள தேசிய குற்றவியல் நிறுவனம் (என்சிஏ) மற்றும் தேசிய சைபர் கிரைம் பிரிவு (என்சிசியூ) உள்ளிட்ட அமலாக்க முகவர்கள் திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளின் பெரும் அளவை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த திருடப்பட்ட கடவுச்சொற்கள் அளவில் பல கோடி பயனர்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. சுமார் 22.5 கோடி கடவுச் சொற்களை மீட்டெடுத்துள்ளதாவும் அவற்றை ‘ஹாவ் ஐ பீன் ப்வ்ன்ட்’ (எச்ஐபிபி) தரவுத்தளத்திற்கு டொனேட் செய்வதாகவும் என்சிஏ தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்கத்துறை மையங்கள் ஆன தேசிய க்ரைம் ஏஜென்ஸி (என்சிஏ) மற்றும் தேசிய சைபர் க்ரைம் யூனிட் (என்சிசியூ) ஆகிய மையங்கள் திருடப்பட்ட சுமார் 22 கோடி கடவுச்சொற்கள் மற்றும் இ-மெயில் ஐடிகளை மீட்டெடுத்துள்ளது.

‘ஹாவ் ஐ பீன் ப்ன்ட்’ (Have I Been Pwned) (HIBP) என்பது ஒரு இலவச ஆன்லைன் சேவையாகும், இது தங்கள் கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் ஐடி கசிந்ததா இல்லையா என்பதை சரிபார்க்க அனுமதிக்கிறது.

ALSO READ:  மரபை மறக்காது இயைந்த வளர்ச்சி: மனதின் குரல் 114வது பகுதியில் பிரதமர் மோடி!

HIBP-ஐ பொறுத்தவரை, இது முன்னதாகவே தரவுத் தளத்தில் வைத்திருக்கும் திருடப்பட்ட கடவுச்சொற்களை சேர்த்து 61.3 கோடி என எண்ணிக்கையை தொட்டுள்ளது.

22.5 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு
ஐக்கிய நாடுகளில் ஹேக் செய்யப்பட்ட க்ளவுட் ஸ்டோரேஜ் மையத்தின் மூலம் இந்த 22.5 கோடி திருடப்பட்ட பாஸ்வேர்ட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாஸ்வேர்ட்கள் ஆனது சர்வதேச அளவில் உள்ள பல பயனர்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பாஸ்வேர்ட்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகள் அனைத்தும் தானமாக Have I Been Pwned (HIBP) என்ற டேட்டாபேஸில் வைப்பதாக அறிவித்துள்ளது.

சுமார் 22 கோடிக்கும் மேற்பட்ட திருடப்பட்ட பாஸ்வேர்டுகள் மற்றும் இ-மெயில் ஐடிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Have I Been Pwned(HIBP) என்ற தளத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் தங்களது பாஸ்வேர்டு அல்லது இமெயில் ஐடி திருடப்பட்டுள்ளதா, லீக் ஆகியுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

கசிந்த கடவுச்சொற்கள் சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு பொக்கிஷம் எனவும் வங்கி சேவை உட்பட எந்த ஆன்லைன் சேவைக்கும் உங்கள் கடவுச்சொல் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க இந்த பட்டியல் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

ALSO READ:  தென்காசி வழியாக கொல்லம் - ஹூப்ளி தீபாவளி சிறப்பு ரயில்!

‘ஹாவ் ஐ பீன் ப்ன்ட்’ இணையதளத்தின் மூலம் உங்கள் கடவுச்சொல் திருடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ‘Have I Been Pwned’ என்ற இணைய தளத்துக்கு சென்று உங்கள் இமெயில் ஐடியை பதிவிட்டு pwned என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த தளத்திற்கு இதன் மூலம் https://haveibeenpwned.com/ நேரடியாக செல்லலாம். அதன்பின் உங்கள் மெயில் ஐடி மற்றும் அதன் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்படும்.

இதன்படி தங்களது மொபைல் எண்ணை பதிவிட்டும் செக் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் பாஸ்வேர்ட் எனும் டேப் இருக்கும் அதை கிளிக் செய்து தங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

‘ஹாவ் ஐ பீன் ப்ன்ட்’ தளம் பாதுகாப்பானது என தேசிய சைபர் செக்யூரிட்டி யூனிட் தெரிவித்துள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளது என எச்சரிக்கை மெசேஜ் வந்தால், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றி, சிக்கலான மற்றும் கடினமான பாஸ்வேர்ட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

ALSO READ:  ரயில் பயணங்களில் ஓர் அனுபவம்!

இணையதளத்தில் இருந்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அர்த்தம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்குகளை பாதுகாக்கும் உங்கள் மின்னஞ்சல் ஐடி திருடப்பட்டிருப்பதை கண்டால் உடனடியாக அதை பாதுகாப்பது நல்லது. அதேபோல் சமூக ஊடங்கள் மற்றும் வங்கி சேவைகளுக்கு ஒரே மின்னஞ்சல் ஐடியை பயன்படுத்த வேண்டாம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...