பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
சிங்கம் மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படுகிறது. அதன் வலிமையைக் கண்டு வேறு எந்த மிருகமும் அதை எதிர்கொள்ளத் துணிவதில்லை.
சிங்கங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆகின்றன. இந்த வீடியோக்களில் சிங்கத்தின் காணக்கிடைக்காத சில அரிய செயல்களை நம்மால் காண முடிகின்றது.
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை கவர்கின்றன. அதுவும் காட்டு ராஜா சிங்கத்தின் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம்.
சில நேரங்களில் அவை சிறிய விலங்குகளை ஆசையாக அரவணைப்பதையும், சில சமயங்களில் மற்ற விலங்குகளின் மீது பயங்கர சினத்தோடு தாக்குதல் நடத்துவதையும் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.
தற்போதும் சிங்ககளின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இரண்டு சிங்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் சண்டையிடுவதைக் காண முடிகின்றது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் இரண்டு சிங்கங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை காண முடிகிறது.
இரண்டு சிங்கக்களுக்கும் இடையே நடக்கும் சண்டை மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. நீண்ட நேரம், இரண்டு சிங்கங்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது.
இரு சிங்ககளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் அருகில் அவற்றின் சிங்கக் குட்டிகளும் இருப்பதைக் காண முடிகின்றது. சண்டை விபரீதமாக மாறி விடாமல் தடுக்க, குட்டிகள் இரு பெரிய சிங்கங்களையும் விலக்கி விடுவதையும் காண முடிகின்றது.
ரோல்மான்ஸ்கி என்ற யூடியூப் சேனலில் சிங்கங்கள் தொடர்பான இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் பிரபலத்தைப் பற்றி பேசுகையில், இது இதுவரை 89 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒருவர், “ராஜாவாக இருந்து, ராஜாவாக வாழ்ந்து, ராஜாவாக இறப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.” என்று கமெண்ட் செய்துள்ளார்.