செங்கோட்டை அருகே பேருந்தின் படியில் பயணித்து கீழே விழுந்த மாணவர்! அதிர்ச்சி வீடியோ!

puliyarai - 2026

புளியரையில் இருந்து தென்காசி செல்லும் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் சாலையோரம் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புளியரையில் இருந்து தென்காசி நோக்கி பயணம் செய்யும் அரசு பேருந்தில் மாணவர்கள் அதிகளவு பயணம் செய்துள்ளனர்.

இவர்களில் சிலர் வேண்டும் என்றே படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்ததாக தெரியவருகிறது.

இவ்வாறு சென்ற மாணவர்கள் குறிப்பிட்ட சமயத்திற்கு மேல் கம்பிகளை பிடித்து தொங்க இயலாமல், சாலையின் ஓரத்தில் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று காலை புளியரையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற 31 ம் எண்ணை சேர்ந்த TN 72 N 1570 என்ற பேருந்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நிறைய பேர் பயணித்துள்ளனர்.

பேருந்தின் நடுப்பகுதியில் இடம் இருந்தபோதிலும்கூட, மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளனர். இதனால் பேருந்து ஒருபக்கமாக சாய்ந்தபடியே சென்றுள்ளது.

அப்படி செல்கையில் பேருந்து செங்கோட்டை கட்டளை குடியிருப்பு ப்ரைவேட் மில் நிறுத்தம் அருகே சென்ற போது, படிக்கட்டில் சாகசம் செய்த மாணவர்கள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாக கால் இடறி கீழே விழுந்தனர்.

விழுந்த மாணவர்கள் சாலை ஓரத்தில் உருண்டதால் பின்னால் வரும் வாகனத்தில் சிக்காமல் தப்பினர். இருப்பினும் லேசான அடிபட்டது அவர்களுக்கு.

பேருந்தில் இருந்தவர்கள் சுதாரித்து ஓட்டுநர், நடத்துநரிடம் விஷயத்தை தெரிவித்து வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளனர். பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

அனைவரும் இணைந்து காயம்பட்ட மாணவர்கள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதில் ஒரு மாணவர் ஐடிஐ படிக்கும் மாணவர் முருகன் என்பது தெரியவந்துள்ளது.

இவர் செங்கோட்டையில் லேசான காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மற்றொரு மாணவர் பற்றிய விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories