கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில்
காலணிகளில் மறைத்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விமான நிலையங்களில் மிக அதிக கண்காணிப்பு இருந்தபோதிலும், விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தல் தடையின்றி தொடர்கிறது, மேலும் விமானக் குழுவினர் மற்றும் சுங்கப் பணியாளர்களுடன் தங்க மோசடியாளர்களின் தொடர்புகள் பல வழக்குகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்த நிலையில் தங்கம் கடத்தியதற்காக கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு விமானப் பணிப்பெண்.அவரிடம் விசாரணை நடத்தியவர்களிடம், தான் இதற்கு முன்பு 6 முறை தங்கம் கடத்த துணை செய்ததாகக் கூறினார்.
1.25 கிலோ தங்கத்துடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் பணியாளர் நவ்நீத் சிக் என்பவரை சுங்கத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
சுங்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலணிகளில் மறைத்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டது.
தங்கம் கடத்தும் கும்பல் தங்கத்தை விமானத்தின் கழிவறையில் வைத்துவிட்டு, அதை ஷூவில் மறைத்துவிட்டு வெளியே கடத்தும் பணியை நவநீத் மேற்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் ரூ.3 லட்சம் கிடைத்ததாக நவநீத் கூறினார். இதன் பின்னணியில் மலப்புரத்தைச் சேர்ந்த தங்கக் கடத்தல் கும்பல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கரிப்பூரில் உள்ள கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பும் தங்கம் கடத்திய இரண்டு விமான பணிப்பெண்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.





