ஜவான்’ பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 1000 கோடி வசூல் செய்ய வாழ்த்துகள்”-டி.டி. ட்வீட்

இயக்குநர் அட்லீ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தை வாழ்த்தி தொகுப்பாளினி டி.டி. ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

images 38 1 - 2026
FWQdOFQUcAEfC 3 - 2026

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான திவ்யதர்ஷினி என்கிற டி.டி. ரசிகர்களின் விருப்பமான தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்வதில் வித்தியாசமான போக்கை கடைப்பிடித்து வருபவர். இதனால் பல பிரபலங்களுடன் டி.டி.க்கு நட்பு உண்டு.

அந்தவகையில், அண்மையில் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில், தொகுப்பாளினியான டி.டி.யும் கலந்துகொண்டார். அப்போது நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட டி.டி., அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஷாருக்கானின் 30 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன். இவ்வளவு வருடங்கள் நீங்கள் எங்களுக்கு கொடுத்தது பல நினைவுகள். நீங்கள் எங்களுக்கு கொடுத்த மகிழ்ச்சி அளவில்லாதது. அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர். சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர் நீங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பதிவை டேக் செய்து, ”நம்முடைய கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான், சினிமா துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை வெளியிடுவதற்கு நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போல் இதற்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை இவ்வாறு இல்லை. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணமான இயக்குநர் அட்லீக்கு நன்றி. மேலும் ‘ஜவான்’ படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய எனது வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் மற்றும் அவரின் மனைவி கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம், பெரும் பொருட்செலவில் ‘ஜவான்’ பத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அட்லீ, பாலிவுட்டில் இயக்குநராகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ‘ஜவான்’ படம் அடுத்தாண்டு ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories