சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் ..

1744991 pinkcus - 2026

மகளிர் இலவச பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. இதனால் சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினர். ஆனாலும் மாநகர பஸ்கள் அனைத்தும் ஒரே நிறத்தில் இயங்கியதால் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் இருந்து சாதாரண பஸ்களை அடையாளம் காண்பதில் பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

எனவே பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களுக்கு ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்று ஏற்கனவே மாநகராட்சி அறிவித்தது. அதன்படி இலவச பஸ்களில் முன்புறமும், பின்புறமும் ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டது. மீதமுள்ள இரு பக்கவாட்டு இடங்களும் செலவு கட்டுப்பாடுகள் காரணமாக அப்படியே விடப்பட்டன. முதல்கட்டமாக 50 பஸ்களுக்கு ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டது. இந்த பஸ்களை சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. மேலும் பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக ‘பிங்க்’ நிறம் பூசப்பட்ட பஸ்களின் இருபுறமும் பக்கவாட்டில் பிங்க் நிறத்துடன் ஒரே மாதிரியாக தோன்றும் வகையில் விளம்பரத்துக்கு வாடகைக்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகர பஸ்களின் பக்கவாட்டு பகுதியில் நிறுவனங்கள் வாடகை செலுத்தி விளம்பரம் செய்யலாம். இந்த விளம்பரங்களுக்கு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘பிங்க்’ நிற பஸ்கள் ஒரே நிறத்தில் முழுவதும் காட்சியளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories