கேரளாவில் ஓணம் லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை..

images 2022 09 15T143819.969 - 2026

கேரளாவில் திருவோணம்‌பண்டிகைக்கு வெளியான பம்பர் லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை படைத்தது.ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு லாட்டரி டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. முக்கிய பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஓணப்பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகம் செய்தது. இதன் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை ரூ.500 என்றும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு இதே குலுக்கலுக்கான சீட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு இருந்தன. இதன் குலுக்கல் வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் ஓணம் பம்பருக்காக அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் 89 சதவீதம் விற்பனை ஆகி உள்ளது. அதாவது அச்சிடப்பட்ட 60 லட்சம் சீட்டுகளில் 53 லட்சத்து 76 ஆயிரம் சீட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ.215 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அனைத்து சீட்டுகளும் விற்பனை ஆனால் ரூ.240 கோடி வருவாய் கிடைக்கும். இது பற்றி லாட்டரி துறை அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் கடந்த ஓணப்பண்டிகையின்போது லாட்டரி மூலம் ரூ.124.5 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை மட்டும் ரூ.91 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இம்முறை ஒரு டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories