திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்து சேவை..

images 2022 09 28T174939.226 - 2026

ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே  10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

mcms 3 1 - 2026

திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம்  100 மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈவே டிரான்ஸ் லிமிடெட் என்கிற தனியார் நிறுவனம் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மலைப்பாதையில்  சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தையொட்டி 10 மின்சார பேருந்துகளை முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்தார். டிசம்பர் மாதத்திற்குள் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதில்  திருப்பதி மலைப்பாதை  சாலையில் 50 பேருந்துகள் அலிபிரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு 14 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து மதனப்பள்ளிக்கு 12 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து நெல்லூருக்கு 12 பேருந்துகளும், கடப்பாவுக்கு 12 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் பெற்றுள்ள எவே டிரான்ஸ் நிறுவனம், 12 ஆண்டுகளுக்கு இவற்றை நிர்வகிக்க உள்ளது. டிசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதால்  சுற்று சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை வெளியேற்றும் மாசுப கட்டுப்படுத்த முடியும்.

100 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதால் கார்பன் வெளியேறுவது ஆண்டுக்கு 5,100 மெட்ரிக் டன் குறைக்க முடியும். ஏ.சி. பேருந்தின் மூலம் டிசல் கிலோமீட்டருக்கு ரூ.28.75 செலவாகும், அதே  மின்சார  பேருந்தின் பயன்பாட்டின் மூலம் கிலோமீட்டருக்கு ரூ.7.70 மட்டுமே செலவாகும். வரும் நாட்களில் மின்சார பேட்டரிகளின் விலை குறையும் என்பதால் பராமரிப்பு செலவு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories