தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை..

images 51 - 2026

தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு புத்தாண்டு விற்பனை களைகட்டியது.

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை பல மடங்கு விற்பது வழக்கம். தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எதிர்பார்ப்பதை விட மது விற்பனை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து விற்பனை சற்று சரிந்தது. உயர், நடுத்தரம், குறைந்த ரகம் மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டதால் குறைந்த ரக மது பிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது நடுத்தர ரக மது பிரியர்களும் குறைந்த ரக மதுபானங்களுக்கு மாறியதால் கடைகளில் எப்போதும் தட்டுப்பாடாக உள்ளது. இதையும் படியுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல் இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் வார இறுதி நாளில் வந்ததால் இந்த வருடம் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளது. டிசம்பர் 31-ந் தேதி மாலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின் உள்ளிட்ட அனைத்து மது வகைகளும் குவிக்கப்பட்டன. தற்போது ஒரு சில இடங்களில் பார்கள் இல்லாததால் சரக்கு பாட்டில்களை வாங்கி வெளியில் வந்து குடித்தனர்.

ஒருசிலர் டாஸ்மாக் கடை முன்பே குடித்தனர். பார்கள் உள்ள கடைகளில் இரவு 11 மணி வரை கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையும் படியுங்கள்: தமிழகத்தில் நாளை கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடினார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கிடைத்தன. புத்தாண்டு உற்சாகத்தில் பலர் கூடுதல் விலையை பெரிதாக எண்ணாமல் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மது அருந்துவதற்காக மொத்தமாகவும் கடைகளில் வாங்கி சென்றனர். சென்னையில் போலீஸ் கெடுபிடி இந்த ஆண்டு கடுமையாக இருந்ததால் மதுபானங்களை அங்கு குடிப்பதற்கு பதிலாக வாங்கி சென்றனர். இதனால் கடந்த ஆண்டை விட புத்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. 31 மற்றும் 1-ந்தேதி 2 நாட்களும் சேர்த்து சுமார் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 31-ந்தேதி மட்டும் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் கடந்த காலத்தை விட மது விற்பனை அதிகரித்துள்ளது. அனுமதி இல்லாமல் பல இடங்களில் பார்களும் நடந்தன. நேற்று புதிய ஆண்டிலும் மது பிரியர்கள் வழக்கம் போல் கடைகளிலும், வீடுகளிலும் தங்கள் நண்பர்களோடு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பண்ணை வீடுகள், ரிசார்ட், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் புத்தாண்டு மது விற்பனை அமோகமாக இருந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories