பெங்களூருவில் நடுரோட்டில், டூவிலரில் 71 வயது முதியவரை இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.டூ வீலரோடு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், சாகில் என்பவர் டூவிலரில் சென்றார். அப்போது எதிரே வந்த கார் மீது மோதினார். இதனால், கோபமான கார் உரிமையாளரான முத்தப்பா (71) என்பவர் காரை விட்டு வந்து விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். இதனால், அங்கிருந்து கிளம்பி செல்ல சாகில் டூவிலரை கிளப்பினார்.
ஆனால், டூவிலரின் பின்புறத்தை முத்தப்பா பிடித்து நிறுத்த முயன்றார். ஆனால், சாகில் தனது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், முத்தப்பா சாலையில், டூவிலரை விடவில்லை. இருப்பினும் சாகில், முதியவரை சிறிது தூரம் இழுத்து சென்றார். அதில் முத்தப்பாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் சாகிலை கைது செய்தனர். இதனை பின்னால் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.