கேரளா-ஊழல் வழக்கில் முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் கைது..

image 1 - 2026

கேரளாவில் வீடுகள் இல்லாதோருக்கு வீடு கட்டி தரும் திட்ட ஊழல் தொடர்பாக முதல்-மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கரை அமலாக்க துறை செவ்வாய் கிழமை இரவு கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளது.

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இவருடன் சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் லைப் மிஷன் என்ற திட்டம் பினராயி விஜயன் தலைமையிலான அரசில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, திரிச்சூரில் வடக்கன்சேரி பகுதியில் 140 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவானது. இதற்கான திட்ட செலவான ரூ.20 கோடியில் ரூ.14.50 கோடியை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியே செஞ்சிலுவை சங்கம் சார்பில் மானிய தொகையாக வழங்கப்பட்ட பணம் செலவிடப்பட்டு உள்ளது.

லாபம் சாரா நோக்குடன் மனிதநேய பணிகளுக்கு உதவிடும் நோக்கில் செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

மீத தொகையை மருத்துவமனை ஒன்றின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் என அதற்கான ஒப்பந்தம் தெரிவிக்கின்றது. இதற்காக யூனிடேக் பில்டர்கள் கட்டுமான ஒப்பந்தம் பெற்று உள்ளனர்.

எனினும், அதன் எம்.டி. சந்தோஷ் ஈப்பன், திட்டத்திற்காக அனைத்து குற்றவாளிகளுக்கும் சேர்த்து ரூ.4.48 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டது.

வழக்கில் குற்றவாளியான சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவருக்கு பங்கு உள்ளது என தெரிவித்து உள்ளனர். சுவப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் என்பவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 3 நாட்கள் விசாரணைக்கு பின்னர், சிவசங்கரை இந்த வழக்கில் அமலாக்க துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories