December 7, 2025, 8:31 PM
26.2 C
Chennai

கர்நாடகா-வீதிக்கு வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் பிரச்சினை..

946893 - 2025

கர்நாடகா மாநிலத்தில் ஐஏஎஸ் ரோகிணி, ஐபிஎஸ் ரூபா இருவரும் ஒருவரை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டி வரும் நிலையில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கர்நாடகா முதல்வர் பொம்மை நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நிலையில் ரோகிணி ரூபா இருவரும் ஒருவரை ஒருவர் தலைமை செயலரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரிக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது.

gallerye 050848519 3247516 - 2025

ரூபா தன் முகநுால் பதிவில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அறநிலையத் துறை கமிஷனராக இருப்பவர் ரோகிணி சிந்துாரி(39). இவர், நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்திருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்.

கோலாரில் கலெக்டராக பணியாற்றிய, ஐஏஎஸ் அதிகாரி ரவி, 2015ல் தற்கொலை செய்தார். ரோகிணி உடனான காதல் விவகாரத்தில் தான் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ரோகிணி மறுத்தார்.
இந்நிலையில், இவர் மீது ஐபிஎஸ்  அதிகாரி ரூபா 19 குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

gallerye 050842586 3247516 - 2025

இதில், ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, தன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்தார் எனவும் குற்றஞ்சாட்டி படங்கள் சிலவற்றையும் நேற்று முன்தினம் வெளியிட்டார்.இதையடுத்து, ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரோகிணி கூறினார்.

இந்நிலையில், ரோகிணியின் அந்தரங்க படங்களை வெளியிட்டது தொடர்பாக, ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி, பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் திங்கள்கிழமை புகார் செய்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ரோகிணியிடம் கேட்ட போது, ரூபா விரைவில் குணம் அடைய வாழ்த்துகள் என்றார்.

இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரூபா, நேற்று தன் முகநுால் பதிவில், ‘நான் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரோகிணி கூறி உள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை அழித்தது பற்றி ஏதாவது கூறினாரா. சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தன் கணவர் மூலம், என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் மோதலால், அரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இருவரிடமும் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்ப, முதல்வர் பசவராஜ் பொம்மை, தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.இந்த பரபரப்பான சூழலில், நேற்று பெங்களூரு விதான் சவுதாவுக்கு சென்ற ரோகிணி சிந்துாரி, தலைமை செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து, ரூபா மீது புகார் கடிதம் கொடுத்துள்ளார்.

இது பற்றி ரோகிணி கூறுகையில், என் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை. என் மீது உள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படி செய்கிறார்.

இதுகுறித்து தலைமை செயலரிடம், விளக்கம் அளித்து உள்ளேன் என்றார்.அவர் சென்ற சிறிது நேரத்தில், விதான் சவுதாவுக்கு வந்த ரூபாவும், தலைமை செயலரை சந்தித்து, 35 நிமிடங்கள் பேசினார். ரோகிணி மீது ஏழு குற்றச்சாட்டுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.

பின் அவர் கூறுகையில் ரோகிணி சிந்துாரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று தான் கேட்கிறேன்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, 15 நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினேன்.அந்த தகவலை அவர்கள், அரசிடம் கொண்டு போகவில்லை. அவரை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. என் புகார் மீது கண்டிப்பாக விசாரணை நடைபெற வேண்டும். ரோகிணியால் என்னை போல் பல பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும், தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் கூறி உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories