
மதுரை திருச்சி சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான,சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்26 ஆம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தரயிலில் மதுரையில் பிற்பகல் புறப்பட்டு இரவு 9மணிக்கு எக்மோர் சென்றடையும்.தின்டுக்கல் திருச்சியில் நின்று செல்லும்.தாம்பரம் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வோர் இந்த ரயிலில் எக்மோர் சென்று திரும்பி தாம்பரம் வரும் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தாம்பரம் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது .

இந்த அறிவிப்புக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னைவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக் கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும். தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மாண்புமிகு மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாத காலத்திற்கு பரிசோதனை முறையில் தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் எனவும் மக்கள் பயன்படுத்தும் நிலை தெரிந்து நிரந்தரமாக நிறுத்தம் வழங்கப்படும் எனவும் தென்னக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.





