இந்து பட்டியலின சமுதாயத்துக்கு துரோகம் இழைத்த ஸ்டாலின்!

Published:

mkstalin - 2026

இந்து பட்டியலின சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் திமுக அரசு என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக சட்டபேரவையில் கிறித்துவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை மதமாற தூண்டும் சதிகளுக்கு துணைபோக தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உயர்ந்த சிந்தனைக்கு செய்யும் துரோகம்.

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அப்பட்டமாக கிறித்துவ, முஸ்லிம்களின் ஊதுகுழலாக செயல்படுகிறது. இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

கிறித்துவ கல்வி நிறுவனங்கள் மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுகிறது. ஆனாலும் மாநில அரசின் இட ஒதுக்கீடுகள் அமல்படுத்துவது இல்லையே ஏன்? கிறித்துவ கல்வி நிறுவனங்கள் அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த மசோதா கொண்டுவருவாரா தமிழக முதல்வர்?

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

சமூகத்தில் தாங்கள் முன்னோர்கள் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை ஏற்று இந்துவாக தன்மானத்தோடு வாழ்ந்த பட்டியலின முன்னோர்களின் தியாகத்திற்கு தரும் சலுகை பட்டியலினம் இழந்து விடக்கூடாது. தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து போராட பட்டியிலின சமூக மக்களும் அமைப்புக்களும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.

சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துக்களை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி மதம்மாறிய கிறித்துர்களுக்கு தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது என தெரிவித்துக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img