train accident modi talk - 2026

எழுத்தாள எம்.பி.,க்கு எகத்தாளம் ஏன்?

அடடே... அப்படியா? அரசியல் சற்றுமுன்
train accident modi talk - 2026
#image_title

“ரயில் விபத்து ஏற்பட்டால் நீதிபதி குழு விசாரணை தான் அமைக்க வேண்டும் என்றும் ஆனால் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது என்றும், ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் தவறை மறைக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கூறியிருப்பது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது.

தொடர்ந்து இது போன்று தவறான தகவல்களை தான் தெரிவித்து கொண்டிருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். 2010 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் ஜனனேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தையடுத்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மம்தா பானர்ஜி அவர்கள் கேட்ட போது பதறித் துடித்து, முடியாது என்று அன்றைய மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் அரசு மறுத்தது ஏன்?

அந்த விபத்து குறித்து சி பி ஐ விசாரித்து மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்ததும், இன்று வரை வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் வெங்கடேசனுக்கு தெரியுமா? அதே போன்று இப்போதும் சி பி ஐ விசாரணை தேவையில்லை என கம்யூனிஸ்டுகள் அலறுவது தான் சந்தேகத்தை வரவழைக்கிறது, யார் செய்த தவறை மறைக்க அன்று சி பி விசாரணை வேண்டாம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள்? இன்று வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள்?

அதே போல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் சி பி ஐ என்பது குற்றங்களை கண்டு பிடிக்க தான் உள்ளதே தவிர,விபத்துகளை அல்ல என்றும் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 2010ம் ஆண்டு ஜனனேஸ்வரி ரயில் விபத்துக்கு சி பி ஐ விசாரணை அளித்தது ஏன்?

அன்றைய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யாதது ஏன்? அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மேற்கு வங்காள மாநில அரசை சி பி ஐ விசாரணைக்கு வற்புறுத்தியது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் சி பி ஐ விசாரணை செய்தது சரி, பா ஜ க ஆட்சியில் தவறா?

நடந்த இந்த துன்ப சம்பவத்திற்கான காரணத்தையும், காரணமானவர்களையும் நீதியின் முன் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

தொழில் நுட்ப ரீதியாக ரயில்வே துறையும், குற்றவியல் ரீதியாக சி பி ஐ யும் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்ப்பவர்கள் எதை கண்டு அச்சப்படுகிறார்கள் என்பதே நம் கேள்வி?

நாராயணன் திருப்பதி. – Narayanan Thirupathy

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.