
இலாகா இல்லாத தமிழக அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Tamil Nadu Governor RN Ravi dismisses jailed V Senthil Balaji from the Council of Ministers with immediate effect.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது…
செய்தி வெளியீடு எண்.40
நாள்: 29.06.2023
அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார். தற்போது அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மேலும் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் குழுவில் திரு.வி.செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாக பாதிக்கும், இது இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன. இந்நிலையில், மாண்புமிகு ஆளுநர் திரு.வி.செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் குழுவிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளார்.
ராஜ் பவன், சென்னை-22
நாள்: 29.06.2023