ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

Published:

annamalai bjp tn leader - 2026

“ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” என்று பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூகத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவு….

பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.

நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், “பல ஜீவராசிகள் நம்மோடு வாழ்கின்றன. அவற்றுக்கு தொந்தரவில்லாமல் பட்டாசு வெடியுங்கள்” என்று தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img