புது தில்லி: சீனாவால் உருவாக்கப் பட்ட ட்ரூகாலர் உள்ளிட்ட 42 மொபைல் ஆப்ஸ் மூலம் மால்வேர் பரப்பப் படுவதால், அவை எந்நேரமும் உளவு பார்க்கப்படும் அபாயத்தில் உள்ளன. இந்தியர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் இந்த 42 ‘மொபைல் ஆப்ஸ்’ உளவு பார்க்கும் மால்வேர்ஸ் மற்றும் வைரஸ்களுடன் இருப்பதால், நம் நாட்டின் மீது இணைய வழித் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் எச்சரித்துள்ளன.
ஏற்கெனவே இது குறித்து முன்னர் ராணுவம் எச்சரிக்கை வெளியிட்டது. அது, சீப் மொபைல் போன் என்று இந்தியர்கள் பலரும் வாங்கிய சீன மொபைல்கள் குறித்தானது. இப்போது மைபைலுடன் வரும் ஆப்ஸ் மற்றும் சில உளவு ஆப்ஸ்களும் அதில் அடங்கியிருக்கிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்ஸ்களில், சீனாவை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட 42 ஆப்ஸ் உள்ளன. இவற்றில் உளவு பார்க்கும் ‘மால்வேர்’கள் இடம்பெற்றுள்ளன. இந்த மால்வேர்கள் சம்பந்தப்பட்ட மொபைல் ஆப்பை பயன்படுத்துபவர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள சர்வருக்கு அனுப்பி வைக்கும்.
இதனால் நம் நாட்டின் மீது ‘சைபர்’ தாக்குதல் எனப்படும் இணையவழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த மொபைல் ஆப்ஸ், ஆப்பிள் போனின் ஐ.ஓ.எஸ்., இயங்கு தளத்திலும், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை என்று கூறப் பட்டுள்ளது.
இந்த 42 ஆப்ஸ்ஸில் வெய்போ, ட்ரூகாலர், விசாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக், டி.யு.ரிகார்டர், சி.எம்.பிரவுசர் உள்ளிட்ட 42 மொபைல் ஆப்ஸ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த எச்சரிக்கை முன்னர் வெளிவந்த போது, பலரும் பயன்படுத்திக் கொண்டிருந்த யுசி நியூஸ், யுசி ப்ரௌசர் குறித்து விவாதம் எழுந்தது. அப்போது, கூகுள் அதனை தன் ப்ளே ஸ்டோரில் நீக்கி, பின்னர் சோதித்து அதனைச் சேர்த்தது. இருப்பினும் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை இதனை வைத்து எழுந்துள்ளது.
அதுபோல் ட்ரூகாலரும் இது ஸ்வீடன் நிறுவனத்தால் தற்போது நிர்வகிக்கப் படுவதாகவும், அப்படி ஒரு பிரச்னை இல்லை என்றும், இது தவறான ரிப்போர்ட் என்றும் கூறியுள்ளது.
அந்த 42 ஆப்ஸ் இவைதான்…
- SHAREit
- Truecaller
- UC News
- UC Browser
- BeautyPlus
- NewsDog
- VivaVideo- QU Video Inc
- Parallel Space
- APUS Browser
- Perfect Corp
- Virus Cleaner (Hi Security Lab)
- CM Browser
- Mi Community
- DU recorder
- Vault-Hide
- YouCam Makeup
- Mi Store
- CacheClear DU apps studio
- DU Battery Saver
- DU Cleaner
- DU Privacy
- 360 Security
- DU Browser
- Clean Master – Cheetah Mobile
- Baidu Translate
- Baidu Map
- Wonder Camera
- ES File Explorer
- Photo Wonder
- QQ International
- QQ Music
- QQ Mail
- QQ Player
- QQ NewsFeed
- WeSync
- QQ Security Centre
- SelfieCity
- Mail Master
- Mi Video call-Xiaomi
- and QQ Launcher.