ஒரு பக்கம் காவிரிக்காகப் போராட்டம், மறுபக்கம் ஷகிலா கொண்டாட்டம் என்று திரையுலகம் தள்ளாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
கோவையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கவர்ச்சி நடிகை ஷகிலா வாரம் என கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரம் முழுவதும் ஷகிலா நடித்த பலான படங்களை திரையிடும் இந்தத் திரையரங்கம் அதற்கான விளம்பரங்களையும் வெகுஜோராக செய்திருக்கிறது.
இன்று நடைபெற்ற நடிகர்களின் போராட்டத்தைக் காட்டிலும் இந்த ஷகிலா கொண்டாட்டம்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தியாக உருவெடுத்து வருகிறது.
காவிரிக்காக நடிகர்கள் நடத்திய மௌன போராட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே, பலரது நியாயமான வருத்தமாக இருக்கிறது.




