இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லி, சென்னை மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அவரது அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சமூக வலைத்தளவாசிகள் சிலர், மஞ்சள் துண்டு போட்டிருக்கும் கருணாநிதிக்கு இன்று கறுப்புத் துண்டை அணிவித்து ஸ்டாலின் இந்தப் போராட்டத்துக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்துவார் என்று கேலியாகக் கூறுகின்றனர்!
கருணாநிதி தானே உடைகளை அணிந்து கொள்ளும் நிலையில் இல்லை. உதவியாளர்கள் தான் அவருக்கு பணிவிடைகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே அவருக்கு மஞ்சள் துண்டை அகற்றி கறுப்புத் துண்டையும் கறுப்புச் சட்டையையும் அணிவித்து, தனது போராட்டத்துக்கு ஒரு முன்னுதாரணத்தை ஸ்டாலின் ஏற்படுத்துவார் என்று கூறுகின்றனர்.
தட்சிணாமூர்த்தி எனும் இயற்பெயர் கொண்ட கருணாநிதி, ஜோதிட ஆலோசனையின் பொருட்டு கறுப்புத் துண்டை அகற்றிவிட்டு மஞ்சள் துண்டுக்கு மாறியதாகக் கூறப்படுகிறது. காரணம், நவக்கிரக குருவின் கடவுளான தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு உரிய நிறம் மஞ்சள். குருவின் அருள் இருந்தால்தான் ஆயுள் பலம், அதாவது நீண்ட மங்கல வாழ்க்கை கிடைக்கும். எனவேதான் அதை கருணாநிதி அணிந்திருக்கிறார். மஞ்சள் நிறத்தில் இருந்து கறுப்புக்கு மாறினால், அது சனியின் பலத்தைக் காட்டும். இன்று வியாழக்கிழமை. குரு வாரம். இது குரு பகவானுக்கு உரிய நாள். இந்துக்கள் மிகப் புனிதமாகக் கருதும் மஞ்சள் வண்ணத்தை அணிந்து கொண்டு, மங்கலகரமாக நாளைத் தொடங்கும் நாள்.
மங்களம் அருளும் குரு பகவானுக்கு உரிய வண்ணம் மஞ்சள் வண்ணம். குரு பகவானுக்கு விருப்பமில்லாத கருப்பு ஆடையை இன்று அணிந்தால், மங்கல நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்காது. எனவே இன்று கருப்பு துண்டு, கறுப்பு பட்டை என எதையாவது அணிந்து கொண்டு வெளியில் வந்தால், அந்த நிறத்தின் பாதிப்பு நமக்கு அமங்கலங்களையே கொண்டு சேர்க்கும். எனவே இன்று கருணாநிதிக்கு கறுப்பு துண்டு அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை ஸ்டாலின் நடத்தி வைப்பார் என்று அடித்துக் கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!