ஆளுநர் மாளிகை முற்றுகைப் பேரணிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு?

அவர்களை நகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பணி இருப்பதன் காரணத்தால் இந்த முற்றுகைப் பேரணி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இவர்களை ஒரு பிடி பிடித்துள்ளனர் வலைத்தளவாசிகள்!

சென்னை: வரும் ஏப்ரல்-18 ஆம் தேதி நடைபெற இருந்த ஆளுனர் மாளிகை முற்றுகைப் பேரணி 24 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சைதை பனகல் மாளிகை முன் நடைபெறும் என்று தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, ஏப்.18 அன்று அட்சய திருதியை என்றும், அதனால்தான் ஆளுநர் மாளிகை முற்றுகைப் பேரணி ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்! அதற்குக் கூறும் காரணம்…

அன்று அட்சய திருதியை என்பதால், ஆளுனர் மாளிகை முற்றுகைப் பேரணியை அறிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், கட்சிப் பொறுப்பாளர்களின் வீட்டுப் பெண்மணிகள் தங்க நகைகள் வாங்க நகைக்கடைகளில் கூடுவார்கள் என்பதால், அவர்களை நகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பணி இருப்பதன் காரணத்தால் இந்த முற்றுகைப் பேரணி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இவர்களை ஒரு பிடி பிடித்துள்ளனர் வலைத்தளவாசிகள்!