
ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு செல்போன் போன் மூலம் நம்பிக்கையூட்டி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தி மதுரை காளவாசலை சேர்ந்தவர் நாகராஜன் (53) இவர் அப்பகுதியில் கடை வைத்துள்ளார் அண்மையில் சென்னையில் இருந்து வைகை விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டியில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த ரயில் விழுப்புரம் வருவதற்கு 40 கிலோ மீட்டர் தூரம் முன்பாக நாகராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் துடிப்பதை பார்த்து அதே ரயிலில் வந்து கொண்டிருந்த நுகர்வோர் அமைப்பு நிர்வாகி ரவீந்திரன் மதுரையில் செஞ்சிலுவை சங்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர் .கோபாலகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இந்த விவரத்தை உடனடியாக மதுரையில் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தில் பணிபுரியும் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இதைத் தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலைய அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ்சை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் நாகராஜனின் இதய செயல்பாட்டை நீட்டிப்பதற்கான முதலுதவி சிகிச்சை முறைகளை செல்போன் மூலமாக ராமமூர்த்தி (இவர் அக்குபஞ்சர் மற்றும் எலக்ட்ரோபதி மருத்துவ நிபுணரும் ஆவார்) ரவீந்திரனிடம் செல்போன் மூலம்
மாரடைப்பு ஏற்பட்ட நபரை சுற்றி கூட்டம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாத்திரை ஒன்றை அவரது நாக்கின் அடியில் வைத்து ,தலையை குனிந்து இருக்கும் படி பார்த்துகொள்ளவேண்டும் எனவும் அடிக்கடி இரும செய்ய வேண்டும் என செல்போனில் தகவல் சொல்ல அதை ஏற்று செயல்பட்டதால் நாகராஜனின் இதய செயல்பாடு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த 108 ஆம்புலன்சில் நாகராஜன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார்.
எலக்ட்ரோபதி மருத்துவ நிபுணரும் ரயில்வே ஊழியருமான ராமமூர்த்தி கூறுகையில்
ரயில் பயணித்தின்போது யாருக்கேனும் மாரடைப்பு வந்தால் நோயாளியை நன்றாக இருமாறு கூற வேண்டும். அடிக்கடி இருமினால் இதயத்தின் செயல்பாடு நிற்பது தடுக்கப்படும். அடுத்து சிகிச்சை அளிக்க மருத்துவர் தயாராக இருக்கிறார். ஒன்றும் ஆகாது என தொடர்ந்து சொல்லி நோயாளிக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும். இவ்வாறு சொல்வதால் நோயாளிக்கு நிச்சயம் நம்மை காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியம் ஏற்படும்.
ரயில் பயணித்தின் போது யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாத திக்குத் தெரியாக இடத்தில் ரயிலை நிறுத்தி விடக்கூடாது.
அவ்வாறு நிறுத்தப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க 20 நிமிடங்கள் ஆகும். மேலும் எந்த வசதியும் இல்லாத இடங்களில் ரயில்களை நிறுத்தும்போது ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்கள் வருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஏற்படும் தாமதம் உயிரிழப்புக்கு காரணமாக அமையும் என்றார்.
ஓடும் ரயிலில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தியை சக ஊழியர்கள், பயணிகள் பாராட்டினர்.



