பிரதமர் கனவில் பலரும் மிதந்து கொண்டிருக்க, ஜோதிடர் ஒருவர் கூறியுள்ள செய்திகள் அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் பரவலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஜினிகாந்த் முதல்வராவார்… ஐஸ்வர்யா ராயின் மகள் பிரதமராவார் என்று ஒரு ஜோதிடர் கணித்துள்ளார்.
இந்த வருடத்தின் ஜோதிட கணிப்புகளை வெளியிட்டுள்ள கியானேஷ்வர் என்ற ஜோதிடர், ஐஸ்வர்யாராயின் மகள் ஆர்த்யா தனது பேரை ரோகிணி என மாற்றிக் கொண்டார் என்றால் அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என கணித்துக் கூறியுள்ளார்.
அடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆகியோர் மீண்டும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சராக வருவார் என்றும் கணித்துள்ளார்.
ரஜினி காந்தின் கட்சி இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அது என்ன கணக்கு என்று இதுவரை யாருக்கும் புரியவில்லை.
இவர் மேலும் கூறியுள்ள சில விஷயங்கள் இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2024ஆம் ஆண்டு போர் வரும் என்று கூறியுள்ள இவர், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு 2019ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார். இவரது கணிப்புகளை வைத்து தங்கள் கதைகளை கூடுதலாகச் சேர்த்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.




