ஓர் இரவு, ” முக்கியத் தலைவர்” தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிற்அது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். “பகுத்தறிவுத் தலைவரின்” அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண் வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்…
கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்திலிருந்து…
செப். 15 – அண்ணாதுரை பிறந்த தினம் இன்று…




