ஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை .! நடப்பவை.!! நடக்க இருப்பவை?

Published:

06 Aug13 TTV Dinakaran - 2026

ஒரு புறம் ரெட் அலர்ட் என்று ஊடகங்களில் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க, சந்தடி சாக்கில் ஜெயலலிதா இல்லாத அதிமுக.,வைச் சுற்றியே மக்களையும் எதிர்க்கட்சிகளையும் வளைய வர வைக்கிறார்கள் அதிமுக., அமைச்சர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுக.,வுடன் இணைத்துவிடலாம் என்று தினகரன் தூது விட்டதாக அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவிற்கு தினகரன் தூதுவிட்டார் என்றார். அமமுக.,வை அதிமுக.,வுடன் இணைக்க தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் தங்கமணி அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

தினகரனை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டார் என்று, டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிலையில், தினகரன்தான் தூதுவிட்டார் என்று தங்கமணி கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி ஓபிஎஸ்., என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் என்று பரபரப்பு கிளப்பினார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

கடந்த வாரம் நண்பர் ஒருவர் மூலம் தன்னைத் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமையை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தன்னை முதலமைச்சர் ஆக்குவதாக ஓபிஎஸ் உறுதி கூறினார் என்று தினகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இரு அணிகள் இணைந்த பின்னர், ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை என்று கூறுகின்றனர் அதிமுக.,வினர்.

டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக சந்தித்திருக்க மாட்டார் என்று அடித்துக் கூறுகிறார், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி. மேலும், அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறார் என்கிறார் அவர்.

மேலும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னை சந்தித்து அதிமுக குறித்து அதிருப்தி தெரிவித்ததாக டிடிவி தினகரன் கூறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த அரசியல் மோதல் தொடர்பாக நடந்த 10 பின்னணித் தகவல்களை பார்க்கலாம்.

1) அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று தீயைப் பற்ற வைத்தார் தங்க தமிழ்ச்செல்வன்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

2) டிடிவி தினகரனுடனான சந்திப்பு தொடர்பான கேள்வியே, கடந்த காலத்திலான ஒன்று என்பது, ஓ.பன்னீர்செல்வத்தின் பதில்!

3) அமமுக.,வை அதிமுக.,வில் இணைக்கக் கோரியும், கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் எனவும் தினகரன்தான் தூது விட்டார் என்பது அமைச்சர் தங்கமணி சொன்ன ரிவிட்.

4) சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் எவ்வாறு தினகரனை சந்திப்பார்? என்பது தங்கமணி தொடுத்த அடுத்த அஸ்திரம்!

5) கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம் என்பது டிடிவி தினகரன் கொடுத்த பதில்!

6) கடந்த வாரம்கூட என்னை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வந்தது என்று மேலும் ஒரு நகைச்சுவையைக் கொளுத்திப் போட்டார் டிடிவி தினகரன்

7) என்னுடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை பதவியை விட்டு நீக்க விருப்பம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது என்பது சிரிக்காமல் சொன்ன டிடிவி தினகரனின் திறமை!

8) ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் கட்சியை இணைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை என்பது, டிடிவி தினகரன் சொன்ன ஒத்தயடிப்பாதை நிலைப்பாடு!

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

9) தினகரன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கட்டுக்கதைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் என்றார் அனுபவஸ்தர் கே.பி.முனுசாமி.

10) அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சி செய்கிறார் என்று அழகிய அரசியல் கருத்தை உதிர்த்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ!

இப்படியாக புயல் ஒன்று அரசியல் களத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அது பதினெட்டு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு வரும் வரையிலும் கரை தாண்டாமல், காற்ற்றழுத்தத் தாழ்வு நிலையாகவே நீடித்து நின்று கனமழையைப் பொழிந்து கொண்டிருக்கும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img