உண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்! ஐயப்பன் திருவிளையாடல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

temple hundial1 - 2026
உச்சநீதிமன்றத்தின் சபரிமலை குறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.

முன்னர், தமிழகத்தின் ஆலயங்களில், அறநிலையத் துறை அராஜகங்களைக் கண்டித்து, கோவில்களில் அறநிலையத்துறை அநியாயங்கள் முடிவுக்கு வரும் வரை “கோவில்களைக் காப்போம்” என்று சீட்டு எழுதிப் போட்டார்கள். அந்த வழியில் இப்போது கேரளம் திரும்பியிருக்கிறது.

பணம்/காசு போடவேண்டாம். கோவில்களை ஏடிஎம்., ஆக நடத்தும் அறநிலையத் துறை உண்டியல்களில் பணம் வராவிட்டால் என்ன செய்கிறது என்று பார்ப்போம்! இனி கோவில் உண்டியல்களில், பணம் போட மாட்டோம். இதுபோல் ஆண்டவனுக்கு கோரிக்கை சீட்டுதான் இடுவோம் என்கிறார்கள் கேரளத்தில்! சபரிமலை தீர்ப்பும், அதற்கு கேரள அரசு, தேவசம் போர்டு மேற்கொண்ட நடவடிக்கைகளுமே இந்த மனமாற்றத்துக்குக் காரணமாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.