
சீன எல்லைக்கருகே ரபேல் விமானங்கள் நிறுத்தப் படுமென்பதால் போருக்கு தயாராக இருங்கள் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. சீன அதிபர் அந்நாட்டு இராணுவத்திடம் அவசரநிலையை உணர்ந்து போருக்கு தயாராக இருக்கும்படி கேட்டுள்ளார்.
கடந்த நூற்றாண்டுகளில் காணாத அளவு உலகம் பெரிய அளவு மாற்றமடைந்து வருகிறது என சீன இராணுவத்திடம் அவர் கூறியுள்ளார். சீன ராணுவம் ரிஸ்க் மற்றும் சவால்களை சந்தித்து வருவதால் சீன மேம்பாட்டு தேவையை பாதுகாக்க போருக்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு ராணுவ செயல்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தைவான் மீது தனது படைபலத்தை பயன் படுத்த சீனா இன்னும் உரிமை பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவும் தனது புதிய ரபேல் விமானங்களை சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அருகே உள்ள முக்கியத் தளங்களில் நிறுத்த உள்ளது.
இந்தியாவும் இருமுனை தாக்குதல்களில் இருந்து தன் நாட்டைப் பாதுகாக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹரியானாவின் அம்பாலா மற்றும் வங்காளத்தின் ஹசிம்புரா தளத்தில் ரபேல் நிறுத்தப்பட உள்ளது.
இந்தியா தற்போதைய நிலையில், தன் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த விமானப் படையின் சு-30ஐ தான் நம்பியுள்ளது. ரஃபேல் விமானங்கள் பணியில் ஈடுபடும் போது, இந்திய வான் பாதுகாப்பு மேலும் பலப்படும்!
ஏற்கெனவே சீன தூதருடன் ரகசிய சந்திப்பு டீபார்ட்டி நடத்திவிட்டு, பின்னர் சமாளித்த ராகுல் காந்தி, ரபேல் காந்தியாகி இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை, ஆனால் ஊழல் நடைபெற்றுள்ளது என்று மட்டும் எனக்குத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் போல் ராகுலும் கங்கிரஸாரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ராகுலின் குரலை பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அப்படியே எதிரொலிக்கிறார். இங்கே இந்தியாவில் மோடிக்கு எதிரான மோசமான பிரசாரத்தை முன்மொழிவதாக கருதிக் கொண்டு, தேச விரோத கோஷங்களை ராகுலும், காங்கிரஸாரும் எழுப்பிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், ராகுல் இன்னமும் ஊழல் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பது, சீன, பாகிஸ்தானின் நலன்களைக் கட்டிக் காக்கவும், இந்திய நலனை காவு கொடுக்கவும் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளாரோ என்று சந்தேகத்தை எழுப்புகின்றனர் நிலைமையை கூர்ந்து கவனிப்பவர்கள்!