தல பொங்கலா? தலைவர் பொங்கலா? எது ‘டாப் கியர்’ தெரியுமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்
viswasam petta - 2026

ஒரு வழியாக பொங்கல் பரபரப்பு சற்று ஓய்ந்து விட்டது. இந்தப் பொங்கலுக்கு இரு தரப்பு மிகமிக உற்சாகமாக இருந்தது. அது, தல அஜித் மற்றும் தலைவர் ரஜினி ரசிகர்கள்தான்.

இந்தப் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் வெளிவந்து சக்கை போடு போட்டது. இதுவரை வெளியான அஜித் படங்களை எல்லாம் விட இந்தப் படத்துக்குதான் செம கலெக்சன் என்று பெருமிதப் பட்டுக் கொண்டார்கள்.

அது போல் ரஜினியின் பேட்ட பலத்த விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரஜினியின் பழைய படத்தைப் பார்த்த எஃபக்ட் கிடைத்தது என்று புளகாங்கிதமடைந்தார்கள் ரஜினி ரசிகர்கள்.

இந்த இடைவெளியில், ஊடகங்கள் தங்கள் பங்குக்கு, இரு படங்களில் எது நிறைய கலெக்சன் கண்டது என்று பட்டிமன்றமே நடத்தினார்கள். தலையா, தலைவரா என்று கடந்த நான்கைந்து நாட்களாக, இணையதளங்களிலும் ஊடகங்களிலும் மரண மாஸ் விளையாட்டை நடத்தினார்கள். இது இரு தரப்பு ரசிகர்களையும் உசுப்பேற்றி விட்டது.

ஆனால், இவர்கள் இருவரையும்விட நாங்கள் களத்தில் இருக்கிறோம் என்று காட்டியிருக்கிறது அரசின் டாஸ்மாக் பொங்கல். தலைவர் பொங்கல்! தல பொங்கலை விட சூப்பர் டாஸ்மாக் பொங்கல்தான் என்று காட்டியிருக்கிறது அரசு!

தலைவர் பொங்கல்- 100 கோடி (11 நாள் – சன் பிக்சர்ஸ்)
தல பொங்கல் – 125 கோடி ( 7 நாள் – விநியோகஸ்தர்)
டாஸ்மாக் பொங்கல் – 445 கோடி (3 நாள் – தமிழக அரசு)

இதுதான் இன்றைய டாப் ஹிட். யாராயிருந்தாலும் டாஸ்மாக் பொங்கலை அடிச்சிக்க முடியாதுப்பா…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.