
திருக்கடையூரில் வருவாய்த் துறையால் அனுமதி மறுக்கப்பட்ட ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) போலீஸ் பாதுகாப்போடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரேக்ளா ரேஸ், மாடுகள், குதிரைகளுக்கு என தனித்தனியே நடைபெற்றது.
இந்நிலையில், வருவாய்த்துறை இதற்கு தடை விதித்தது. இதனிடையே பாதுகாப்பாக நடைபெறும் வகையில், இதற்காக 3 டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.. இதனால் இந்த முறை பலத்த பாதுகாப்புடன் ரேக்ளா ரேஸ் போட்டி நடைபெற்றது.



