எங்கள் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ துல்லியத் தாக்குதல்கள் நடந்தும் அதை வெளியில் சொன்னோமா?! காங். கேள்வி!

எச்சரிக்கை இது நம் ஒன்றே கால் பக்க நாளேடு 

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட விமான தாக்குதல் – சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இது குறித்து பேசினார்

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதுபோன்ற விமான தாக்குதல்கள் துல்லிய தாக்குதல்கள் எங்களது காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் அதிகம் முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது! பல்வேறு முறை இதுபோன்ற துல்லிய தாக்குதல்களை நாங்களும் நடத்தி உள்ளோம்! ஆனால் இது குறித்து நாங்கள் வெளியில் சொன்னதில்லை!

பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது என்ற காரணத்தால் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட துல்லிய தாக்குதல்கள் குறித்து வெளியில் மூச்சுக்கூட விட்டதில்லை. ஆனால் தற்போதைய பாஜக அரசாங்கம் எல்லாவற்றையும் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறது! இது நிச்சயமாக பாதுகாப்பு விஷயங்களை அரசியலாக்குவது தான்!


இதையும் படியுங்கள்:


ஆனால் எங்கள் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முறை இவ்வாறு விமானத் தாக்குதல்கள் – துல்லிய தாக்குதல்களை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாங்கள் அதை வெளியில் ஒருமுறைகூட எவருக்கும் சொன்னதில்லை! அவ்வளவு ஏன் இந்திய விமானப்படைக்குக் கூட இந்தத் துல்லியத் தாக்குதல்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை! இந்திய விமானப் படை அதிகாரிகளுக்குக் கூட இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விமானப்படை துல்லியத் தாக்குதல்கள் குறித்து நாங்கள் சொன்னதில்லை என்று கூறினார்!

இந்நிலையில் ரந்தீப் சுர்ஜேவாலா கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பாகிஸ்தான் மேற்கொண்ட விமானத் தாக்குதல்கள் குறித்து பேசுகிறார். அவர், பாகிஸ்தானின் அமைச்சரவையில் தாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அவருக்கு பதிலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவர் இந்திய விமானப்படைக்கு கூட தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் சொன்னது இல்லை என்று வெளிப்படையாக சொல்கிறார் என்று பதில் கொடுத்தார்!

 In the meantime Randeep Surjewala Congress Spokesperson, has issued a statement that this type of airstrikes where carried out many times earlier also, during Congress rule, but we didn’t disclose it to anyone, not even to Indian Air Force. 
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...