கணிதமேதை கதிரவன்.. டியூஷன் செண்டர்!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

stalin math - 2026ஸ்டாலின் அண்மைக்காலமாக தப்பும் தவறுமாக பேசி வருவது ஒருபுறம் இருந்தாலும் கணக்கீடுகளும் தவறாகவே போட்டு வருவதாக புலம்புகின்றனர் உடன் பிறப்புகள்

தற்போது திமுகவுக்கு 87 உறுப்பினர்கள் இருக்கின்றனர்; இன்னும் ஒன்பது பேர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கை சேர்த்து 107 உறுப்பினர்கள் நமக்கு உள்ளனர்! இன்னும் ஆறு பேர் வந்தால் போதும் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்றெல்லாம் கணக்குகளைப் போட்டு கதி கலங்க வைத்தார் மு க ஸ்டாலின்!

stalin math2 - 2026

தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது ஏற்கனவே தாம் போட்ட கணக்கு தவறு என்று பலபேர் எடுத்துச் சொன்னதால் புதிய கணக்கை இப்பொழுது போட்டு இருக்கிறார்

திமுகவுக்கு 87 உறுப்பினர்கள் என்றும் தலைவர் கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில் ஒரு இடம் போக 86 உறுப்பினர்கள் இருப்பதாக சரியாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்

மேலும் காங்கிரசுக்கு 8 பேர் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக்குக்கு ஒரு இடம் என ஒன்பது பேரை சேர்த்து மொத்தம் 97 இடங்கள் நமக்கு உள்ளன; 97 பேர் ஆதரவு திமுகவுக்கு உள்ளது எனவே என்று தவறான கணக்கை போட்டு உடன்பிறப்புகளை கதிகலங்க வைத்திருக்கிறார்!

dmk calculator - 2026

இப்போது இந்த கணக்குகளை மீம்ஸ்களாக போட்டு திமுக வட்டாரத்தை கதிகலங்க அடித்திருக்கிறார்கள் சமூக வலைதள மேதாவிகள்!

திமுக., கால்குலேட்டர் என ஒன்று இப்போது புதிதாக உருவம் எடுத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.