modi in andaman - 2026

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? கருத்துக் கணிப்புகள் ஒரு புறம் இருக்கட்டும் நியூமராலஜி ஜோதிடம் என்ன சொல்கிறது?

இப்போது கருத்துக் கணிப்புகளும் ஜோதிடமும் ஒன்று தான் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்! அன்றாடம் பார்க்கும் நாள் ராசிபலன்கள் போன்று கருத்து கணிப்புகளும் திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நாள் பலன்கள் அவரவர் ராசிக்கு பொருந்தி வந்து அவை சரியாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் மனதளவில் அவற்றை நம்பிக் கொண்டு அன்றாடம் வாழ்க்கையை துவங்குபவர்கள் பலர்.

அப்படித்தான் இந்த கருத்துக் கணிப்புகளும் மாற்றத்தை நோக்கிய ஒரு நம்பிக்கையை அவரவர்க்கு அளித்திருக்கும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வரத் துவங்கியதும் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று தகவல்கள் வெளியாகின. அதனால் பாஜக தொண்டர்கள் சற்று குஷியாகவே இருந்தனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பரபரப்பாக இயங்கின.

ALSO READ:  மதமாற்ற விவாதம் … மீண்டும்!

அறுதிப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களை பாஜக பெறும்போது எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மோடி பிரதமர் ஆக கூடாது; அவரை பிரதமராக விடாமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்ற ரீதியில் ஆலோசனைகளை நடத்தின. நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மோடியின் தனிப்பட்ட ஜாதகம் குறித்தும் பாஜகவின் நியுமராலஜி நம்பர் கொண்டும் சில கருத்துகளை ஜோதிடர்கள் மற்றும் எண்ணியல் நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர். அப்படி ஒரு நியூமராலஜி தான் இது படிப்பதற்கு சுவாரசியமோ அல்லது அறிவியல்ரீதியான கணக்கீடுகளோ எவை குறித்தும் கவலைப்பட தேவையில்லை!

bjp numerology - 2026எண்ணியல் என்ற நியூமராலஜி எப்படி இதனை வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் குறித்து நியூமராலஜி இவ்வாறு தெரிவிக்கிறது… பிஜேபி என்ற மூன்று எழுத்து உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள நியூமராலஜி எண் 2 8 2.
அதுபோல் என்டிஏ என்ற எண்ணுக்கு 3 3 6.
கடந்த வருடம் கடந்த 2014 தேர்தல் முடிவுகள் வெளியான நாள் 16 5 2014. இவற்றின் கூட்டுத்தொகை 19.
இந்த 19 உடன் பிஜேபி என்ற மூன்றெழுத்து கூட்டு எண் 28ஐயும் பெருக்கினால் 532.
அதை இரண்டால் வகுத்தால் கிடைப்பது 266.
அதனுடன் தேர்தல் முடிவு வெளியான நாள் 16 கூட்டினால் 282.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

ஆக பாஜக பெற்ற மொத்த இடங்களின் எண்ணிக்கை 282.

அதேபோல் இப்போது 2019 ஆம் வருடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாள் 23 5 2019.
இவற்றின் கூட்டுத்தொகை 22
இந்த 22 ஐ, பிஜேபி என்ற மூன்றெழுத்தில் உள்ள கூட்டு எண் 28 உடன் பெருக்கினால் கிடைப்பது 616
இதனை இரண்டால் வகுத்தால் கிடைப்பது 308
இந்த இந்த 308 உடன் தேர்தல் முடிவு வெளியாகும் நாளான 23ம் கூட்டினால் கிடைப்பது 331

எனவே பாஜக நிச்சயமாக 331 இடங்களை கைப்பற்றும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு இப்போது தெரிவிக்கிறார்கள்

கருத்துக் கணிப்புகளும் இவ்வாறுதான் 2014 ம் வருட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் அதன் பிறகு வெளியான தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு ஒரு கணக்கினை கொடுத்தார்கள்… அது இப்போதும் நடக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்!

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending