சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் போலி சான்றிதழ்கள்! தமிழறிஞர்கள் அதிர்ச்சி!

அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

tamil araychi niruvanam seminar - 2026

சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் போலியான வகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பெயர் பதிக்கப் பெற்று சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. இது குறித்து தமிழறிஞர்கள் தங்கள் அதிர்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் ( http://iatrnew.org ) வட அமெரிக்கத் தமிழ்க் கூட்டமைப்புகளும் இணைந்து, அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடத்திய 10ஆம் உலகத் தமிழ் மாநாடு 2019 ஜூலை 4-7 ஆகிய நாட்களில் நடைபெற்றது!

இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் உயர் ஆய்வு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் (IITS) பெயரைப் பயன்படுத்தி போலியான சான்றிதழ்கள் வழங்கப் பட்டிருப்பதைக் கண்டு தமிழறிஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநாட்டுக் குழுவினரின் இத்தகைய அவல அரங்கேற்றத்தினைக் கண்டித்து தமிழறிஞர்கள் பொதுநலவழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். இந்த மாநாட்டுக்கு தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளதுடன், தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு குழுவினருடன் கலந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.