
அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநா்களை கண்டாலே நமக்கு ஒருவித பயம் தோன்றுவது இயற்கையான ஒன்றுதான் ஏன் பல நடத்துநா், மற்றும் ஓட்டுநா்களின் மனிதாபிமான அற்ற செயலால் அவா்கள் மீது நமக்கு எப்போதுமே ஒரு வித பயம் வருவது வாடிக்கையான ஒன்று.
ஆனால் அதையெல்லாம் சிலா் ஓட்டுநா் மற்றும் நடத்துனா் பொய் என நிருபித்து பயணிகளிடம் நற்பெயரையும் வாங்கி சம்பவம் எ்பபோதாவது அத்திபூத்தாற்போல நடைபெற்று வருவது நம்மில் பலருக்கு அது ஆச்சரியம் தரும் செய்தியாகவே இருக்கிறது.
அதே போல ஒரு சம்பவம் நமது அண்டை மாநில பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா் காவல் துறையினா் செய்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று நாகா்கோவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது பலராமபுறம் என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த போது பெண் பயணி ஒருவா் நெஞ்சு வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
மூச்சு விட முடியாமல் அந்த பயணி துடிப்பதை பார்த்த சக பயணிகள், நடத்துநா் ஸ்ரீகாந்துக்கு இது குறித்த தகவல் கொடுத்தார்
இதனையடுத்து நடத்துனா் ஸ்ரீககாந்த அருகில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு அந்த பெண் பயணியை கொண்டு செல்ல முடிவு செய்தனா்.
டிரைவா் ராஜேஷ் பஸ்ஸை கொஞ்சம் அதிவேகமாக மருத்துவமனை நோக்கி ஓட்டிச்சென்றார். ஆம்புலன்ஸ் வாகனம் போல தொடா்ந்து ஹாரன் அடித்தவாறே பேருந்தை ஓட்டிச்சென்றார்.
காருக்கமண்டபம் என்ற இடத்தில் பஸ் வரும்போது அங்குள்ள போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலா்கள் பஸ்க்குள் ஏதே பிரச்சினை என்பதை யூகித்து பைலட் வாகனத்தை பஸ்க்கு முன்னால் ஓட்டி வந்து பேருந்து போக்குவரத்து இடயுறு இல்லாமல் செல்ல வழி செய்தனா். பேருந்து நான்கு கிலோமீட்டா் துாரம் கடந்து வந்தபோது அருகில் ஒரு தனியார் மருத்துவமனை தென்பட்டது பேருந்து மருத்துமனையை சென்றைடைந்தது. அப்போது ஸ்டெரச்சருக்கு கூட காத்திருக்காமல் உடனடியாக காவலா் நெஞ்சுவலியால் துடித்த பெண்பயணியை போலீசார் ஒருவரே துாக்கி சென்று மருத்துவமனையில் சோ்த்தார் தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அந்த பெண் பயணியின் உயிர் காப்பற்றப்பட்டது.
இதனால் சகபயணிகள் பெருமூச்சு விட்டனா். பிரச்சனையை புரிந்து கொண்டு பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் பேருந்து டிரைவா், கண்டிரக்டா்க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனா்.
இந்த முழு சம்பவத்தையும் முழு வீடியோவாக எடுத்து கேரளா போலீஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இணையத்தில் தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது. கண்ட்ரக்டா், டிரைவா் மற்றும் போலீசாருக்கு பல முனைகளிலிருந்து பாராட்டும், வாழ்த்தும் குவிந்து வருகிறது.



