வெள்ளத்தால் அசாம் மக்கள் கடும் பாதிப்பு !

அடடே... அப்படியா? இந்தியா

pramabuthira - 2026சாமில் பெய்து வரும் தொடர் மழையால் 66 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 4.2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறு, ஏரிகள் நிறைந்து காட்சி அளிக்கிறது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களை சேர்ந்த பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது.

பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும், இது ஓரிரு நாளில் அபாய கட்டத்தை எட்டும்assam flood - 2026பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது வீடுகள் இடிந்துள்ளன. 13 ஆயிரத்து 268 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4,23,386. பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்தாக தெரிவித்து உள்ளது  மாநில அரசு. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும், இது ஓரிரு நாளில் அபாய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் தங்கவும்  அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

வெள்ளப்பாதிபபில் இருந்து மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.