பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் விலங்கினத்திற்கும், சுற்றுச்சூழல் மாசுயடைவதற்கும் பெரும் காரணமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த நிலையில் மானினம் இதனால் பாதிப்படைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் இருக்கும் நாரா பூங்கா மான்களுக்காகப் பிரசித்தி பெற்றது . 1880-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் ஆயிரத்துக்கும் அதிகமான சிக்கா வகை மான்கள் சுதந்தரமாகச் சுற்றித் திரிகின்றன .
கடந்த நான்கு மாதங்களில் 14 மான்கள் வரிசையாக உயிரிழந்துள்ளன . அவற்றைப் பரிசோதித்தபோது ஒரு மானின் வயிற்றிலிருந்து 4 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன. இது அங்குள்ள விலங்கியல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



