இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம் ! காய்ச்சலுக்கு டயலாசிஸ் செய்த மருத்துவர்கள் !

அடடே... அப்படியா? இந்தியா புகார் பெட்டி

diolysis - 2026மகாராஷ்டிரா மாநிலம், பிம்ப்ரி பகுதியை சேர்ந்த ஆனந்த் அனில்வால் என்பவர், யஷ்வந்த்ராவ் சவான் மெமோரியல் ஹாஸ்பிடலில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாகக் கூறி, டயலாசிஸ் செய்துள்ளனர்.மிகச் சிறிய வயதான ஆனந்த் அனில்வாலுக்கு எப்படி இத்தகைய பாதிப்பு ஏற்படும் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.diolysis 1 e1563166661415 - 2026இதனால் மருத்துவமனையில் பெரும் பிரச்னை வெடிக்கவே, இதுபற்றி விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், தவறான முறையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க நேரிட்டுவிட்டதாக, தவறை ஒப்புக் கொண்டுவிட்டது.
இதையடுத்து, சாதாரண காய்ச்சலுக்கு தனக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து, உடல்நிலையை பாழாக்கிவிட்டதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மருத்துவமனை மீது புகார் எழுப்பியுள்ளார். மேலும் வழக்கு தொடரப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண காய்ச்சலுக்கு சென்ற நபரை சினிமாவில் வருவதுபோல டயாலிசிஸ் செய்த மருத்துவர்களுக்கு கண்டனம் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.