சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ! குன்னூரில் பெர்சிமன் பழ சீசன் துவக்கம் !

இந்தியா சற்றுமுன்

perciman - 2026குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் பேரிக்காய், ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை “பெர்சிமன்’ பழ மரங்களும் உள்ளன.

இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது பழங்கள் ஏராளமாக காய்த்துத் தொங்குகின்றன.ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் சீசன் இருக்கும்.sims park - 2026இப்பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும், ஆஸ்திரேலியாவை தாயகமாகவும் கொண்டுள்ளது. தக்காளி போன்ற தோற்றத்துடன் காணப்ப்டும் இப்பழத்தில் வைட்டமின் ஏ, பி சத்துகள் நிறைந்துள்ளன. இப்பழங்கள் மற்ற பழங்களைப் போன்று மரத்திலேயே பழுப்பதில்லை.

காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை எத்தனால் என்ற திரவத்தில் ஊறவைத்தால் இரண்டு நாள்கள் கழித்துதான் பழுக்கும். தென் இந்திய அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் மட்டும்தான் இப்பழ மரங்கள் உள்ளன.

இப்பழங்கள் கிலோ ரூ. 150 வரை விற்கப்படுகின்றன. இதன் நாற்றுகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளதை அடுத்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.