அத்திவரதர் ஆண்டுதோறும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தருவதால்… ‘வெச்சி செய்றாங்க’ ஸ்டாலின்!

Published:

stalin in assembly - 2026

பெயர் – மு.க.ஸ்டாலின்! ஆசை- முதல்வர் நாற்காலி! தகுதி- துண்டுச் சீட்டு இருந்தாலும் உளறி வைப்பது!

காஞ்சிபுரத்திலே அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரக்கூடிய வகையில் ஒரு விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது… என்று, சட்டமன்றத்தில் இன்று திமுக., தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வழக்கம் போல் உளறிக் கொட்டியதாக, வழக்கம் போல் வெச்சி செய்கிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்!

ஏற்கெனவே ‘துண்டுச்சீட்டுத் தலைவா’ என்று ஆசையுடன் நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப் படும் திமுக., தலைவர் ஸ்டாலின், இம்முறை துண்டுச்சீட்டைப் பார்த்துப் படித்தும் உளறியதாக, நெட்டிசன்கள் ரொம்பவே கலாய்த்து வருகிறார்கள்!

ஆனால், அத்திவரதர் வைபவத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அண்மைய பிரச்னைகள் குறித்து  மு.க. ஸ்டாலின் சட்டசபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், 4 பக்தர்கள் உயிரிழந்தது, 31 பேர் மயங்கி விழுந்தது குறித்து செய்தி வந்துள்ளதா என அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இருப்பினும், அத்திவரதர் வைபவத்தில் ரவுடிகளை அழைத்துச் செல்வதும், ஆட்சியரகத்தில் பாஸ் பெற்று மோசடியில் ஈடுபடுவதும், அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்க என்றே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், ஆட்டோக்கள் மூலம் அநியாய வசூலில் ஈடுபடுவதும் திமுக.,வினரே என்று குற்றம் சாட்டுகின்றனர் காஞ்சிபுரம் வாசிகள்!

ஒருபுறம், அத்திவரதர் வைபவத்தால் கோயில் அர்ச்சகர்கள் சம்பாதிக்கிறார்கள் என்ற பிரசாரத்தை செய்து கொண்டு, மக்களிடம் கொள்ளை அடிப்பது திமுக.,வினரே என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்!

இந்நிலையில், சட்டமன்றத்தில் அரசுக்குக் கேள்வி எழுப்பிய ஸ்டாலினின் பேச்சின் போதுதான், வருடந்தோறும் அத்திவரதர் வைபவம் நடப்பதாகக் கூறினார் என்று, வீடியோ ஒன்றினைப் பகிர்ந்து, சமூக வலைத்தளவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.

என்னாது..? 40 ஆண்டுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதா..?

Related articles

Recent articles

spot_img