விமானநிலையத்தில் எனக்கு அக்ரமம் நடந்துவிட்டது ! வாசிம் அக்ரம் மனவருத்தம் !

அடடே... அப்படியா? உலகம் புகார் பெட்டி விளையாட்டு

vasim akram - 2026தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், மான்செஸ்டர் விமானநிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

53 வயதான அக்ரம் தன்னுடன் இன்சுலினை ஒரு பையில் எடுத்து சென்றுள்ளார். விமான நிலைய அதிகாரிகள் அதனை அவரது குளிர்ச்சியான பையில் இருந்து எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டு அவரிடம் தந்துள்ளனர். இது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்ததாகவும், தன்னை அவர்கள் ஏளனமாகவும், கடுமையாகவும் நடத்தினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வாசிம் அக்ரம் வெளியிட்ட பதிவில், ‘மான்செஸ்டர் விமான நிலையத்தில் மனம் நொறுங்கி போனது. நான் உலகம் முழுவதும் இன்சுலின் பெட்டியுடன் தான் பயணம் செய்கிறேன். ஆனால் ஒரு தடவை கூட என்னை யாரும் இந்த அளவுக்கு சோதனை நடத்தியது இல்லை. கேள்விகளை கேட்டதில்லை. இந்த முறை அனைவர் முன்னிலையில் என்னை நடத்திய விதம் என் மனதை புண்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.