“உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க..” – கிளி ஜோசியம் மூலம் வாக்கு சேகரிப்பு.
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிநடைபெறுகிறது.
அதிமுகவும், திமுகவும் எப்பபாடு பட்டாவது ஜெயிக்க வேண்டும் என போட்டிபோட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பலவிதமான நவீன யுக்திகளை பயன்படுத்தி, அதிமுகவும், திமுகவும் வாக்களா்களை கவர்ந்து வருகின்றனர்.
இதில் நுாதனமான முறையில் கிளி ஜோசியம் மூலம் வாக்களா்களை கவா்ந்து வருகிறது.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரின் உருவ படங்கள் பொறித்த டிஜிட்டல் பேனர்களை தொங்கவிட்டு, அதன் அடியில் உட்கார்ந்து ஒருவர் உட்கார்ந்து, பாண்டி என்ற கிளியை வைத்து ஜேசியம் சொல்லுகிறார்.
அவா் தன்னிடம் ஜோசியம் பார்க்க வரும் பொதுமக்களிடம் கிளி, கூண்டில் இருந்து வெளியே வந்து ஒரு சீட்டை எடுத்து தர, உடனே ஜோசியர், “உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. எல்லாம் நல்லது நடக்கும்” என்று கூறுகிறார்.
இந்த கிளி ஜோசியம் மூலம் திமுகவினர் வாக்கு சேகரிப்பது மக்களிடையே ஆர்வத்தையும், வியப்பையும் ஏற்படுத்துகிறது.
ஜோசியம் கட்டுக்கதை, கடவுளை நம்புவது மூடநம்பிக்கை,என மேடைதோறும் முழக்கமிட்டு இது பொரியார் பூமி என ஓலமிட்டு வரும் தி.க, திமுக பகுத்தறிவு பாசறை சேர்ந்தவா்களுக்கு கிளிஜோசியம் என்ன நம்பிக்கையே என பொதுமக்கள் முனுமுனுத்து செல்கின்றனா்.



