பத்து நாள் குழந்தை உயிரிழந்த பரிதாபம் ! பாகிஸ்தான் இராணுவம் செய்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்

pakishthan - 2026போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதோடு  எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.kasmir - 2026அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், மோட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதலில் நடத்தினர்.baby 4 - 2026இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ஒரு வீட்டில் இருந்த பிறந்து பத்தே நாள் ஆன கைக்குழந்தை படுகாயம் அடைந்தது. மேலும் இரு பெரியவர்களும் காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை பூஞ்ச் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு இரு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.