என்ன கொடும சரவணா…?! காமஹாஸன் அதையும் தாண்டி புனிதம்கிறாரு!? பிக்பாஸ் அவலங்கள்!

உரத்த சிந்தனை சினி நியூஸ் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

biggboss - 2026

நடிகர் கமலஹாசனை ஏன் காமஹாசன் என்கிறார்கள் தெரியுமா? என்ற கேள்விக்கான பதிலை டிவிட்டர் பதிவுகளில் தெறிக்க விட்டிருக்கிறார்கள் ரசிகப் பெருமக்கள்.

பிக்பாஸ் சீஸன் 3 வெகு தடபுடலாக தொடங்கியது என்று சொல்லலாம். காரணம், பிக்பாஸின் பாஸ் தேர்தலில் போட்டியிட்டு பெயில் ஆனபோதிலும், கிடைத்த ஓட்டுக்கள் தாங்களே எதிர்பாராதது என்று மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மிதந்தபடி, தாம் பாஸ் ஆனதாக தமக்குத் தாமே அறிவித்துக் கொண்டு, அந்தக் கையுடன் பிக்பாஸ் அரிதாரம் பூசி, களத்தில் இறங்கிவிட்டார்.

கடந்த சீஸன்களில் நடந்தது போலவே இப்போதும் அசிங்கங்களும் அறுவெறுப்புகளும் ஆக்கிரமித்திருக் கின்றன. சினிமாவின் சென்சார் கத்திரிகளுக்குத் தப்பிக்க முடியாமல் பெட்டிக்குள் முடங்கிப்போன காட்சிகளெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியின் வழியே பிக்பாஸ் நாடகமாக நடிப்புப் பெற்று, ஆண் பெண் உறவுகளைக் கொச்சைப் படுத்தி வெகுஜனங்களுக்கு சமுதாயத்தின் இருண்ட பக்கத்தை ஒளிபொருந்தியவையாக உள்ளே புகுத்திக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய அசிங்க அவலங்களில் ஒன்றுதான் அண்மையில் அரங்கேறியது. அதற்காக இணையதள வாசிகள் கமல்ஹாசனை காமஹாசன் என காய்த்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

“பெண்களை இடிப்பதற்கென்றே பஸ்சில் போவேன் என்று சொன்ன நடிகர் சரவணனை கன்டிக்காமல் கைதட்டி வரவேற்ற கமல்ஹாசன் பின்னாடியும் பத்து பேர் சுத்துறானுங்க.. கமல்ஹாசனை காமஹாசன் என இதனால்தான் நான் குறிப்பிடுகிறேன்.. ஓட்டு கேட்டு ஊருக்குள்ள போனா பெண்கள் வெளக்கமாத்தால அடிச்சி விரட்டுவாங்க..”

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.