தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பரங்களை பல்வேறு செய்தி நிறுவனத்திற்கு வழங்கிவரும் தனியார் செய்தி நிறுவனம் ஒரு “பவரான ” பெயருடன் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது.
இத்தனியார் விளம்பர ஏஜென்சியானது ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பரங்களையும், செய்தியாகவும் வெளியிட பல கோடியும் பணமாக பெற்றுக் கொண்டு தூத்துக்குடி மக்களை தவறான புரிதலுக்கு கொண்டு செல்வதாக தெரிகிறது.
ஆங்கில இதழ்களுக்கு தன்னை “பவர்” ஏஜென்ட் போல காட்டிக் கொள்ளும் அந்த நபர் தூத்துக்குடியில் உள்ள பல வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு மிக நெருக்கமாகவும் உள்ளார் .
தூத்துக்குடி மக்களுக்கும் பிற கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், பல்வேறு வகையில் இன்னல்களையும் தவறான புரிதல்களை வழங்கி வரும் தனியொரு நிறுவன ஏஜென்சியின் செயல்களை பல்வேறு சமூக அக்கறையுள்ள நல் உள்ளங்கள் வன்மையான எதிர்ப்புகளை செலுத்தி வருகின்றனர்.
இவை பற்றி விரிவான ஆவண ஆதரங்களுடன் கூடிய விரைவில் அம்பலமாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- அக்ரி பரமசிவன்




