வழக்கம்போல்… திருநாவுக்கரசர் மீது ஈவிகேஎஸ்.,ஸின் புகார் பட்டியல்!

Published:

khushbu evks thirunavukarasar - 2026

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு முழு நீள புகார்ப் பட்டியலை வாசித்து வருகிறார். அவரது புகார்ப் பட்டியல் இதுதான்…

  • பத்து மணிக்கு கூட்டம் என்றால் 12 மணிக்கு தான் திருநாவுக்கரசர் வருவார்.
  • திருநாவுக்கரசர் மைக்கை பிடித்தால் கீழே வைக்க மனம் வராது.
  • எல்லா கூட்டத்திலும் அதிமுக , பாஜக பற்றியே பேசுகிறார்.
  • பிற கட்சிகளின் முன்னாள் தலைவர்களை புகழ்வது தவறில்லை. ஆனால் ஜால்ரா அடிக்க கூடாது.
  • கடைசியில் காங்கிரஸ் கட்சி பற்றி பேசுகிறார். யார் தான் கேட்பார்கள்.
  • திருநாவுக்கரசருக்கு யாரும் நெருக்கடி தரவில்லை , காங்கிரஸ் என்ற எண்ணமே இல்லை.
  • விரைவில் மாற்றம் வரும் , ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பார்.
  • காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் திருநாவுக்கரசருக்கு இல்லை.
  • திருநாவுக்கரசரை நீக்க வேண்டுமென உண்மையான தொண்டர்கள் விரும்புகின்றனர்.
  • திருநாவுக்கரசர் ஒரு இன்ச் கூட வேலை செய்யவில்லை.
  • பலமாக இருக்கும் இயக்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் உள்ளது.
ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

– ஈவிகேஎஸ் இளங்கோவன்

Related articles

Recent articles

spot_img