சித்தார்த்தா நடத்தியது ஒரு ரவுடி ராஜ்யம்; காஃபி மாஃபியா!

Published:

vgsidhartha - 2026

தனியார் வங்கியின் வாராக்கடன் வசூலிக்கும் துறையின் சர்க்கிள் மற்றும் சிக்மகளூர் கூர்க் காஃபி விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்து வரும் செய்திகள் சித்தார்த்தா எவ்வளவு பவர்ஃபுல் மாஃபியாவை நடத்தியிருக்கிறார் என விவரிக்கிறது.

ஒரு முன்னாள் வங்கி அதிகாரி சொன்னது…

நான் 15 வருடத்திற்கு முன் தனியார் வங்கியின் வாராக்கடன் வசூல் செய்யும் துறையின் தலைவராக பணியில் இருந்த போது அசல் கடன் 120 கோடி, மற்றும் வட்டி 9 கோடி மற்றும் சித்தார்த்தாவின் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து திரும்ப வந்த (Bounced Cheques) 138 காசோலைகள் சார்பாக அளிக்கப்பட்ட சம்மன்களையும் விசாரிக்க என் கீழ் பணிபுரியும் 20 அதிகாரிகளை அவரின் அலுவலுகம் மற்றும் வீட்டிற்கு அனுப்பினேன்.

அந்த அதிகாரிகள் குண்டர்களால் சூழப்பட்டு மிகவும் அச்சுறுத்தப்பட்டனர். இதை தூக்கி சாப்பிடுவது போல சித்தார்த்தா தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியை ஒவ்வொரு அதிகாரியின் முகத்திற்கு நேராக பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் அதிகாரிகள் அனைவரும் 30 வயதுடைய இளைஞர்கள். அதில் சிலருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. அவர்களை பெரும் போராட்டம் நடத்தி, போலீஸ் அதிகாரிகள், சிஆர்பிஎஃப் உதவியோடு மீட்டோம். அந்தக் கொலை மிரட்டல் வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

சிக்மங்களூர் மற்றும் கூர்க் காபி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியது…

சித்தார்த்தா காபி கொட்டைகள் ஏலம் எடுக்கும் கூட்டத்திற்கு லோக்கல் ரவுடிகள், குண்டர்களோடு வந்தாலே மற்ற காபி விற்பனையாளர்கள் பயந்து நடுங்கி ஒதுங்கிக் கொள்வார்கள். “என்னைப் பார்த்தாலே உங்களுக்கு முதுகுத்தண்டுல வேர்க்கணுமே”?? எனக் கேட்கும் வழக்கம் கொண்டவர் அவர். எத்தனையோ முறை பலவந்தமாக நிறைய காபி விற்பனை யாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சம்பவங்கள் உண்டு. ஒரு தனி காஃபி மாஃபியா நடத்தி இருக்கிறார்.

அவரை இன்று என்னமோ, மிக நேர்மையான வியாபாரி என தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். தொழிலில் எதிரிகளே இல்லாமல் பார்த்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் சென்று, அதாவது குடும்பத்தைக் கடத்தி மிரட்டுவது, அடித்து கையெழுத்து வாங்குவது, காஃபி தோட்ட அபகரிப்பு என எந்த எல்லைக்கும் போயிருக்கிறார் சித்தார்தா.

இருபதாயிரம் பேருக்கு வேலை கொடுத்தார்.. இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் இருபதாயிரம் குடும்பத்தை, ஒரு சில குடும்பத்தில் தலைமுறையைவே அழித்திருக்கிறார்.!

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

இவை தவிர தனியார் வங்கிகளிடம், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனின் அளவு மிக அதிகம்…

  • சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்

Related articles

Recent articles

spot_img