நாயை பதுங்கித் துரத்தும் முதலை! பரபரப்பாகும் காணொளி காட்சிகள்!

Published:

crocodile - 2026குஜராத்தின் வதோதரா நகரில் கடந்த புதன்கிழமை முதல் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால்  நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலைகள் வீடுகள் இருக்கும் தெருக்களுக்கு வந்ததால் அப்பகுதி மக்களுக்கு பயத்தினையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரண்டு தெரு நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அப்போது, அதில் ஒரு நாயின் பின்புறமாக முதலை ஒன்று, நாயை பிடிப்பதற்காக மெதுவாக பின் தொடருகிறது.கவ்விப்பிடிக்க போகும் நேரத்தில் நாயானது மயிரிழையில் தப்பியது.இக்காட்சி தற்பொழுது வலை தளங்களில் வலம் வருகிறது.

Related articles

Recent articles

spot_img