அமர்ந்தால் அபராதம் ரூ.முப்பதாயிரம் ! ரோமின் ஸ்பானிஸ் படி !

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள்

spanish steps rome cr getty - 2026பல பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது இத்தாலியின் ரோம் நகரம். பண்டைய கால கட்டிடக்கலை, நாகரிகங்கள் குறித்து ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் செல்லும் இடங்களில் ரோம் நகரமும் ஒன்று.

இத்தாலி தலைநகர் ரோமில் புகழ்பெற்ற மிக முக்கிய வரலாற்று சின்னமாக திகழ்வது ஸ்பானிஷ் படிகள். ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உணர்த்தக்கூடியது.. இந்த படிகள் 1776 ஆம் ஆண்டு ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் என்ற கட்டிடக் கலை வல்லுநரால் வடிவமைக்கப்பட்டது

174 படிகளைக் கொண்ட இதன் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மான்டி என்ற தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் பல புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.இந்நிலையில் அவர்கள் படிகளில் உட்கார்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றால் வரலாற்றுச்சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று புகார்கள் எழுந்த நிலையில்,rom - 2026ஸ்பானிஷ் படிக்கட்டுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பழமை வாய்ந்த ஒரு சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமரவோ, அல்லது கூடாரமிடவோ தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. ஸ்பானிஷ் படிக்கட்டுகளில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் யாரும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சிறப்பு சுற்றுலா பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பானிஷ் படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை அவர்கள் விசில் அடித்து எச்சரித்து அனுப்புவார்கள். அதனையும் மீறி அவர்கள் படிக்கட்டில் அமர்ந்தால் 400 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.