வியாழனை தாக்கும் விண்கல் ! வானில் தோன்றிய அற்புத நிகழ்வு !

அடடே... அப்படியா? உலகம் தொழில்நுட்பம் பொது தகவல்கள்

jupiter.jps - 2026நாம் வாழும் சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் விளங்குகிறது. இந்த கோளிற்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து தாக்கும் காட்சி டெலஸ்கோப் ஒன்றில் பதிவாகியுள்ளது.

இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர், செலெஸ்டிரான் 8 டெலஸ்கோப் மூலம் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் வியாழன் கோளின் இடதுபுறம் கீழாக வெள்ளை நிறப் புள்ளி ஒன்று தென்படுகிறது.  இது மிகப்பெரிய விண்கல் ஒன்று, வேகமாக கோளிற்குள் நுழைந்து செல்வதை காட்டுகிறது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சாப்பல், ஒரேவொரு பிரேமில் வியாழன் கோளிற்கு ஏற்பட்ட பாதிப்பை அட்டகாசமாக பதிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 1994ஆம் ஆண்டு, வியாழன் கோளை எஸ்.எல்.9 என்ற விண்கல் தாக்கியது படம் பிடிக்கப்பட்டது. இது சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்பம் நிறைந்தது ஆகும்.

இதனை வானியல் அறிஞர் டாக்டர்.ஹெய்டி பி.ஹாம்மெல் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் படம்பிடித்திருந்தார். இவர் தற்போது சாப்பலின் கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். அதேசமயம் கடந்த ஜூன் 27, 2019ல் வியாழன் கோளை படம்பிடித்த புகைப்படங்களை நாசாவும் வெளியிட்டுள்ளது.

Single frame and DeTeCt output image of the potential impact on #Jupiter. pic.twitter.com/kjZZgOYlQf

— Chappel Astro (@ChappelAstro) August 7, 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.