சுபாஷிதம்: நட்பின் இலக்கணம்!

சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

20. நட்பின் இலக்கணம்

ஸ்லோகம்:

ஆரம்பகுர்வீ க்ஷயிணீ க்ரமேண
லக்வீ புரா வ்ருத்திமுபைதி பஸ்சாத் |

தினஸ்ய பூர்வார்த பரார்தபின்னா
சாயேவ மைத்ரீ கலசஜ்ஞனானாம் ||

–பர்த்ருஹரி நீதி -50

பொருள்:

சூரியோதய வேளையில் நம் நிழல் நீண்டதாக இருக்கும். அது சிறிது சிறிதாக மத்தியான வேளையில் குறைந்து கொண்டே வரும். அதே போல் தீயவர்களின் நட்பு ஆர்பாட்டத்தோடு ஆரம்பமாகும். சிறிது சிறிதாகக் குறையும். நல்லவர்களின் நட்பு மத்தியான நிழல்போல் சிறியதாகத் தொடங்கி சிறிது சிறிதாகப் பெருகும்.

விளக்கம்:

நல்லவர்களின் நட்பு சிறிது சிறிதாக வளரும். தீயவர்களின் நட்பு அதற்கு மாறாக அட்டகாசமாகத் தொடங்கி சிறிது சிறிதாக குறைந்து விடும். நட்பை நிழலோடு ஒப்பிடுகிறது இந்த ஸ்லோகம்.

இரு மனிதர்களின் இடையே அறிமுகம் அவர்களின் விருப்பு வெறுப்புகள் ஒன்றாவதன் மூலம் சிறிது சிறிதாக நட்பாக மாறும். சுயநலமின்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் மூலம் சினேகம் தினம் தினம் வளரும். நிரந்தரமான நட்பாக நிலைத்து வாழ்நாள் முழுவதும் நிற்கும்.

நட்பிற்கு சாட்சியாக நிலைத்து நிற்பவர்கள் எத்தனையோ பேர் சமுதாயத்தில் உள்ளார்கள். அவ்வாறின்றி சுயநலத்திற்காக கொள்ளும் நட்பு ஏதோ ஒரு பலனை எதிர்பார்ப்பதால் சிறிது சிறிதாகக் குறைந்து போகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.